நாம் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம். அல்லாஹ்வையன்றி அனைத்தையும் மிகைத்தவன் யாருமில்லை - எர்துகான்

Published On Tuesday, 5 September 2017 | 01:30:00

மியன்மாரின் வலிதரும் காட்சிகள் மனிதகுல மனங்களை நிலைகுலையச்செய்கின்றன. அனைவரும் அமைதியான போதிலும் அனைவரும் விமர்சிக்கின்ற போதிலும் நாம் அராகானில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலைப் பற்றி பேசுவோம், விவாதிப்போம் , விமர்சிப்போம்.

அராகானில் இடம்பெறுவதை முழு உலகுக்கும் நாம் விளக்கிச்சொல்வோம்.

மியன்மாரில் ஷுஹதாக்கலான எங்கள் முன்னோர்கள் இருப்பதை அறியாதவர்கள் இருக்கின்றார்கள். அந்தப் பிராந்தியத்துடன் எமக்கு வரலாற்றுத் தொடர்புண்டு. அது எமது பரந்த மனங்களின் பூகோளப் பரப்பின் பாலானது.

மியன்மார் முஸ்லிம்கள் எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்த்துவிட்டார்கள். எனினும் அவர்கள் மீதான படுகொலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அராகானிலுள்ள எமது முஸ்லிம் சகோதரர்களுடான எமது உறவு பலமானதும் வரலாற்று ரீதியானதுமாகும். அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீதுக்கு உதவியுள்ளனர்.

அவர்கள் ரயில் பாதைகளை அமைப்பதற்காக வேண்டி செல்வங்களை ஒன்று சேர்த்து சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுக்கு அனுப்பினார்கள்.
அவர்கள் வரலாற்றில் எமது படைக்கு உதவியுள்ளார்கள். எமக்காக எச்சரிக்கை நிலைமையை பிரகடனப்படுத்தினார்கள். தம் உயிர்களை அர்ப்பணித்தார்கள்.
அவர்கள் உஸ்மானிய தேசத்தின் புவியியல் விடுதலையில் பங்குகொண்டவர்கள். அவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். அவர்களை நாம் தனிமையில் விட்டுவிட மாட்டோம்.

அவர்கள் எமது படைகளுடன் பக்கபலமாக நின்று அட்ரினா நகரை விடுவிப்பதில் பங்காற்றியவர்கள்.

ஏனைய நாடுகளைப் போல அவர்கள் விடயத்தில் நாம் நடக்க மாட்டோம் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளட்டும். அவர்களுக்கு நாம் முதுகைக் காண்பிக்க மாட்டோம்.

அராகானில் அந்த சிறுபான்மைக் கெதிராக நடக்கும் படுகொலைகளை பார்த்துவிட்டு அதற்கெதிராக எதுவும் செய்யாமல் மௌனியாக இருப்பவர்கள் அதில் பங்காளிகளே ஆவர்.

Image result for erdogan rohingyaஅராகான் முஸ்லிம்கள் விவகாரத்துக்காக வேண்டி நான் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.

எமது அராகான் மாகாண முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளையும் நாம் கடுமையாக நிராகரிக்கின்றோம்.

நாம் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வேண்டியே எம்மால் முடிந்தளவு செயல்படுவோம். அல்லாஹ்வை அன்றி அனைத்தையும் மிகைத்தவன் யாருமில்லை.

 – பைரூஸ் மாஹாத் –
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved