டாலருக்கு பதிலாக பிற நாட்டு கரன்சிகளுக்கு பெட்ரோல் விற்க வெனிசூலா முடிவு!

Published On Monday, 11 September 2017 | 15:34:00


பெட்ரோல் உற்பத்தி நாடுகளில் தென்னமெரிக்க நாடான வெனிசூலா நாடும் ஒன்று. இந்த நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் இதனால் அமெரிக்க வல்லரசு வெனிசூலா அதிபர்களை எதிர்ப்பதும் அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருவதும் வாடிக்கை. தற்போது அமெரிக்க வங்கிகள் வெனிசூலா பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிடும் பங்கு பத்திரங்கள் மீதான வர்த்தகத்தில் ஈடுபட தடைவிதித்தது.

இந்த பொருளாதார தடையை உடைப்பதற்காகவும், பங்கு பத்திர சந்தையில் ஓங்கியிருக்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பிலிருந்து மீளேழுச்சி பெறுவதற்காகவும் தனது நாட்டு இயற்கை வளங்களான பெட்ரோல், கேஸ், தங்கம் போன்ற பொருட்களை சீன யுவான், இந்திய ரூபாய், ஜப்பானிய யென், ரஷ்ய ரூபிள் போன்ற சர்வதேச கரன்சிகளில் விற்கப்படும் என வெனிசூலா அதிபர் மதூரோ அறிவித்துள்ளார்.

இதற்குமுன் டாலருக்கு எதிராக பிற கரன்சிகளில் பெட்ரோல் விற்க முயன்ற இராக் அதிபர் சதாம் ஹூசைன், லிபியா அதிபர் கடாபி (Gold Money – டாலருக்கு பதில் தங்கத்திற்கு பெட்ரோல் விற்கும் திட்டம்) ஆகியோர் கொல்லப்பட்டதன் பிரதான பின்னனிகளில் இதுவும் ஒன்று என்றாலும் தற்போது ஈரானிலிருந்து இந்திய இறக்குமதி செய்யும் பெட்ரோலுக்கு 45% இந்திய ரூபாயே செலுத்தப்படுகிறது மீதத்தொகை பிற பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஈரானுக்குக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தருவதன் மூலம் சரிசெய்யப்படுகிறது, ஈரானுக்கு காவல் ரஷ்யா என்பதால் இந்திய ரூபாயில் பெட்ரோல் வர்த்தகம் சாத்தியமாயிற்று.

Source: ARAB NEWS
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved