புளூவேல் விளையாட்டினால் விரலைக் கிழித்த மாணவன்! பெற்றோரின் கண்காணிப்பால் காப்பாற்றப்பட்டான்

Published On Wednesday, 13 September 2017 | 15:07:00

இந்தியாவின் தர்மபுரி அருகே புளூவேல் விளையாட்டு விளையாடிய பிளஸ் 1 மாணவன், பிளேடால் தனது விரலைக் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டூர் அருகே பிளஸ் 1 கற்றுவரும் 16 வயது மாணவனின் நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் அடைந்த பெற்றோர், அவரைக் கண்காணித்து வந்த நிலையில் மாணவன் திடீரென பிளேடால் தன் விரல்களை அறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவன் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், குறித்த மாணவன் தனது அப்பியாசக் கொப்பிகளில் நீல திமிங்கிலத்தின் படத்தை வரைந்து வைத்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ன்னெடுத்துவருகின்றனர்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved