Breaking News

ஷார்ஜாவில் தொழிலாளர் நல ஆலோசணை மையம் திறப்பு !


ஷார்ஜாவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலம்சார் ஆலோசணை வழங்கிடும் Indian Workers Resource Centre (IWRC) எனும் மையம் திறக்கப்பட்டது. ஏற்கனவே துபையில் இதுபோன்ற மையம் செயல்பட்டு வரும் நிலையில் ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா வாழ் இந்தியர்களின் நலனுக்காக இந்த 2வது மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா நகரின் மத்தியில், மத்திய அஞ்சலகத்திற்கு எதிரேயுள்ள டமாஸ் டவர் (புருஜ் 2000) 22 வது மாடியில் இந்த மையத்தை இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி திறந்து வைத்தார். இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை வழங்கிவரும் BLS நிறுவனமும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9The services being provided at the IWRC Dubai at the Silver Tower, Cluster-I in Jumeirah Lakes Towers) துபையில் செயல்படும் முதலாவது ஆலோசணை மையம் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்களால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டு மனநிம்மதி இழந்துள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான ஆலோசணை மற்றும் உதவிகளை 24 மணிநேரமும் வழங்கி வருகிறது. (IWRC Dubai runs a 24-hour toll-free helpline (800 INDIA or 800 46342) that offers assistance to Indians in distress in the UAE)

சட்ட நடவடிக்கைகள், சம்பளம் உட்பட அனைத்து நிதிப் பிரச்சனைகள், மனநல ஆலோசணைகளை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வழங்கி வருகின்றது. தேவையுடையோர் ஹெல்ப் லைன் எண், ஈமெயில் மற்றும் நேரிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்களின் குறைகள் பதிவு செய்யப்படுவதுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒரு அடையாளச் சான்று எண் வழங்கப்பட்டு கவுன்சலிங் பெறுவதற்கான தேதியும் நேரமும் ஒதுக்கித் தரப்படும்.

மேலும், துபையில் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்களை நேரில் பெறுவதற்கான கவுன்டர்களும் காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும்.The walk-in counter at the new office will receive petitions directly from Indians in distress from 8am to 8pm from Saturday to Thursday. The centre also provides counselling by experts in legal, psychological and financial matters by phone or email and in person.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


No comments