ரஷ்யாவிடமிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை கொள்வனவு செய்கிறது துருக்கி! ஒப்பந்தமும் கைச்சாத்து!

Published On Thursday, 14 September 2017 | 14:24:00

துருக்கி அரசாங்கம் ரஸ்யாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ரஸ்யாவின் எஸ்-400 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பில் துருக்கி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதற்கான வைப்புத் தொகை வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி  ரெசெப் தயிப் எர்டோகன்    தெரிவித்துள்ளார். நேட்டோ படையின் இரண்டாவது பெரிய இராணுவத்தை துருக்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்து, துருக்கி ரஸ்யாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved