ஹஜ் பயணிகளை ஏற்றிச்சென்ற சவூதி விமானத்தின் குளிரூட்டி பழுதானது - மயங்கி விழுந்த பயணிகள் (வீடியோ)

Published On Tuesday, 12 September 2017 | 16:21:00

பாகிஸ்தானுக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் குளிர்சாதன பெட்டி செயல்படாததால் பயணிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா நகரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு SV-706 என்ற விமானம் கடந்த 9ம் திகதி புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குளிர்சாதன பெட்டி செயல்படாமல் போனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் வயதானவர்கள் மயங்கி விழுந்தனர்.

கடும் சிரமங்களுக்கு பின்னர் மூன்று மணிநேரம் தாமதமாக விமானம் தரையிரக்கப்பட்டது.

இச்சம்பவத்தின் போது பயணி ஒருவர் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved