கத்தார் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! உள்துறை அமைச்சு விடுக்கும் முக்கியச் செய்தி!

Published On Tuesday, 12 September 2017 | 11:45:00


கத்தார் மனித உரிமைகள் திணைக்களத்தின் தலைமையகம் தற்போது புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சின் கீழ் இயங்கி வரும் கத்தார் மனித உரிமைகள் திணைக்கம் இது வரை காலமும் அல்-மர்கிய்யா பிரதான பாதையில் இயங்கி வந்தது. இது தற்போது மதீனா கலீபா நகரில் அமைந்துள்ள பழைய போக்குவரத்து திணைக்களத்தின் கட்டடிடத்துக்கு கடந்த 10ம் திகதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த மாற்றத்தின் பின்னர் மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக காலை 6.30 மணி தொடக்கம் நன்பகல் 1.00 மணி வரை திறந்து இருக்கும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் தேவைப்படுபவர்கள் கீழ்வரும் இலக்கதுடன் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளது. 
call 2343555.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved