ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் அரபு பெண்ணை கொன்ற இலங்கையர் கைது

Published On Sunday, 3 September 2017 | 22:58:00

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த ஒருவர் சார்ஜா நகரில் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
38 வயதான இந்த இலங்கையர், சார்ஜாவை சேர்ந்த 28 வயதான அரபு பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த பெண் சார்ஜாவின் மேசலுன் என்ற பிரதேசத்தில் வசித்து வந்ததுடன் அவரது வீட்டில் கொலை நடந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு கைரேகை அடையாளங்கள் உட்பட மேலும் சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிடைத்த சாட்சியங்களை கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் குற்றப் புலனாய்வு திணைக்களம் இலங்கையை சேர்ந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையர் இறந்த பெண்ணுடன் மறைமுக தொடர்பை கொண்டிருந்தாக தெரியவந்துள்ளது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved