உலகின் மிக வயதான பெண் என்ற பெயரைப் பெற்ற மூதாட்டி மரணம்!

Published On Sunday, 17 September 2017 | 13:12:00


தற்போது உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான 'வயலெட் மோசே பிரவுன்' என்றும் 'Aunt V' என சுருக்கமாகவும் என்றழைக்கப்பட்ட 117 வயதுடைய முதிய பெண்மணி மறைந்தார். இவர் 1900 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் பிறந்தவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் இறந்தார்.

இவருக்கு முன் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று 117 வது வயதில் மறைந்த, 3 நூற்றாண்டுகள் கண்ட, இத்தாலியின் எம்மா மொரானோவின் (Emma Morano) இறப்பை அடுத்து மூதாட்டி வயலெட் அவர்கள் வாழும் வயதான பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்றழைக்கப்படுகின்றன. காமன்வெல்த் நாடுகளின் உறுப்புநாடுகளில் ஒன்று ஜமைக்கா என்பதாலும், மகாராணி விக்டோரியா காலத்திலும் வாழ்ந்து தன்னுடைய காலத்திலும் வாழும் வரலாற்றின் மிஞ்சமாக வாழும் பெண் என்பதாலும் தற்போதைய மகாராணி எலிசபெத் II இவருக்கு சிறப்பு வாழ்த்து மடலை அனுப்பி சிறப்பித்திருந்தார்.

அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்ற கடைசி தலைமுறையை சேர்ந்த இவர் தன் இளம் வயதில் கரும்பு தோட்ட ஊழியராகவும், வீட்டுப் பணிப்பெண்ணாகவும் இருந்து பின்பு தனது கிராமத்தில் இருந்த ஒரே ரொட்டிக்கடை மற்றும் சொந்த வீட்டின் உரிமையாளராகவும் உயர்ந்தார்.

Source: Metro.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved