Tuesday, 19 September 2017

இந்தியாவிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் செல்போன் வெடி குண்டு பறிமுதல்! பயணிகள் அதிர்ச்சி

மங்களூரில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் செல்போன் வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நடாக மாநிலம் மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் தனியார் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை விமான போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் வைத்து இருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் செல்போன் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அது போலி வெடிகுண்டு என உறுதி செய்யப்பட்டது. விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Author: verified_user

0 comments: