Breaking News

சக்கரை நோயாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! - அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முறையான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செலுத்திப் பார்த்ததில், உடல் பருமனையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதர்களிடமும் இச்சோதனை வெற்றியடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது சர்க்கரை நோயாளர்களுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே தீர்வாக இருக்கின்றது.

எனவே, விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இந்த திரவத்தை செலுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என புரூஸ் ஸ்பைகில்மென் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

No comments