கண்டி, வத்தேகமயில் பன்றிக்கு வைத்த மின் கம்பியில் சிக்கியவர் பலி.

Published On Tuesday, 12 September 2017 | 16:12:00

கண்டி வத்துகாமம் உடுராவணை பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்தை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சட்ட விரோதமான முறையில் இழுக்கப்பட்ருந்த மின் கம்பியில் சிக்கிய 73 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். 10 ம் திகதி மாலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தில் கடும் சுகவீனத்திற்கு உள்ளாகிய 73 வயதடைய இவரை வத்துகாமம் வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வத்துகாமம் உடுராவன பிரதேசத்தை சேர்ந்த ஈ..எம். குலரத்ன என்ற 73 வயதுடையவராவார். இவரது மரணம் தொடர்பாக மரண விசாரணை 11 ம் திகதி இடம்பெற உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர். வத்துகாமம் பொலீஸார் இச் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved