Friday, 22 September 2017

கத்தாரை அடி பணிய வைக்கும் சவூதிக் கூட்டணியின் முயற்சி பலிக்க வில்லை - ஐ. நா. கூட்டத்தில் அமீர்!

கத்தாரை சவூதி கூட்டணி அடி பணிய வைக்கும் முயற்சி பலிக்கவில்லை என தெரிவித்துள்ளார் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள். ஐ.நாவில் 72 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் உணவு மற்றும் மருந்து உட்பட கத்தார்  குடிமக்களின் அடிப்படை வாழ்வை நிலை குலையச் செய்து அடி பணிய வைக்கும் முயற்சி ஒரு தீவிரவாத செயலில்லையா? எனவும் தனது 22 நிமிட உரையில் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (முஹம்மது ஹாசில்)

Author: verified_user

0 comments: