கத்தார் இரயில் சோதனை ஓட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது!

Published On Sunday, 24 September 2017 | 15:14:00

கத்தார் நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பில்லியன் கணக்கு பெறுமதியான ப்ரஜெக்ட்களில் ஒன்றால் கத்தார் மெட்ரோ  விளங்குகின்றது.  எதிர்வரும் ஆண்டு இறுதியில் நிறைவடைய இருக்கும் கத்தார் இரயில் திட்டத்தின் 60-70 வரையான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக உள்ளூர் தளங்கள்  வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி கட்டார் இரயிலின் 4 இயந்திரங்கள் ஜப்பான் நாட்டிலிருந்து கத்தார் துறைமுகத்தின் ஊடாக வந்தடைந்தன.இந்த இரயில்கள் பொருத்தப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதனை அங்கு பணிபுரியும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 12 செக்கன்கள் கொண்ட வீடியோ தற்போது கத்தாரில் வைரவாக பரவி வருகின்றது.இந்த வீடியோவைக் கீழே காணலாம். என்றாலும் இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளிவாக குறிப்பிடப்படவில்லை.


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved