அமீரகம் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! 'டூ' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் எச்சரிக்கை !

Published On Sunday, 17 September 2017 | 14:42:00

அமீரகத்தில் புதிய வகை மோசடி ஒன்று பரவி வருவது குறித்து தனது வாடிக்கையாளர்களை 'டூ' (Du) தொலைத்தொடர்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்களை அழைக்கும் மோசடிப்பேர்வழிகள் தாங்கள் 'டூ' நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், 'டூ' கட்டணத்தை தள்ளுபடியில் சலுகையில் கட்டித்தருவதாகவும் ஆசைவார்த்தைகளை கூறுகின்றனர், மேலும் இவர்கள் திருடப்பட்ட கிரடிட்கார்டுகளை பயன்படுத்தி கட்டணங்களை கட்டுவதால் சம்பந்தப்பட்ட 'டூ' வாடிக்கையாளர் தான் அதிலிருந்து எழும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளனர்.


'டூ' நிறுவனம் எந்த தள்ளுபடி கட்டண சலுகையையும் அறிவிக்கவில்லை அதேபோல் வாடிக்கையாளர்களுடைய வங்கி விபரங்களையோ அல்லது தனிப்பட்ட விபரங்களையோ ஒருபோதும் கேட்காது. பரிசுத்திட்டங்கள் எதையும் நடத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுடன் மோசடிப்பேர்வழிகள் உங்களைத் தொடர்பு கொண்டால் உங்களுடைய புகாரை fc@du.ae இதனுள் சென்று தெரிவிப்பதுடன் 'டூ' நிறுவனத்தை எப்போதும் வாடிக்கையாளர் தொடர்பு எண் 155 வழியாக நேரிடையாக தொடர்பு கொள்வதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved