கத்தார் துறைமுகம் இன்று உத்தியோக பூர்வமாக அதிபர் ஷேக் தமீம் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது!

Published On Tuesday, 5 September 2017 | 14:31:00

கத்தாரின் முக்கிய செயற்றிட்டங்களில் ஒன்றான ஹமத் துறைமுகம் உத்தியோக பூர்வமாக இன்று திறந்து வைக்கப்படுகிறது. டோஹா நகரின் தெற்குப் பகுதியான உம் அல் ஹவ்ல் பகுதியில் அமைந்த இந்த துறைமுகத்தை கத்தாரின் அதிபர் ஷேக் அல் தமீம் அல் தானி அவர்கள் திறந்து வைக்க இருக்கின்றார். கத்தார் வரலாற்றில் இது ஒரு மைக்கல்லாகவே கருதப்படுவதாக உள்ளூர் செய்தி தளங்கள் குறிப்பிட்டுள்ளன. 


இந்த துறைமுகத்திலிருந்து உலகின் 150 இடங்களுக்கான கப்பால் பாதைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. சுதந்திரமான முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் வழி திறந்துள்ளததாக கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த துறைமுகம் மத்திய கிழக்கில் மிகப் பெரிய துறைமுகம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. 

கத்தார் மற்றும் சவூதிக் கூட்டணிக்கிடையில் கடந்த ஜுன் 5ம் திகதி இடம் பெற்ற முறுகலைத் தொடர்ந்து ஹமத் துறைமுகம் பகுதி அளவில் திறக்கப்பட்டு இயங்கிவந்தது. தற்போது முழுமையாக திறக்கப்படுவதனால் பல்வேறு பட்ட நன்மைகளை கத்தாரில் விரைவில் பெறும் என்பது உண்மையாகும்.

(ஆங்கிலத்தில் - கல்ப்டைம்ஸ்
தமிழில் - உண்மையின் பக்கம்.)Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved