Sunday, 3 September 2017

கத்தார் உள் விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமையில்லை கத்தார் அமைச்சர்....!

ராஜதந்திர உறவுகளைத் துண்டித்திருப்பதன் நோக்கம் தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடல் என தெரிவித்துள்ள கத்தார் அதனைத் தாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.

வளைகுடா அரபு நாடுகள் தமது நாட்டின் கொள்கைகளில் ஆளுமை செலுத்துவதைத் தாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இது வரை தமக்கெதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரபூர்வமாக முன் வைக்காத நிலையில் ஏனைய நாடுகளது விவகாரங்களில் தலையிடுவதாக தெரிவித்துக் கொண்டு தமது உள்விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என தெரிவித்துள்ளது.

கத்தார் முறுகலைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் பெல்ஜியமும் தற்போது பங்கெடுத்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(முஹம்மது ஹாசில்)

Author: verified_user

0 comments: