மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு 82,500/= ரூபாய் தண்டம் - நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

Published On Saturday, 23 September 2017 | 15:32:00

மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் கந்தளாய் நகர் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 82,500/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு நேற்றுமுன்தினம் கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நகரத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரை கைது செய்து மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆவணங்களை கோரிய போது எவ்வித ஆவணமும் இல்லாத நிலையில் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

கந்தளா-யுனிட் 15 -வெண்றாசன்புர பகுதியைச்சேர்ந்த 22வயதுடைய ஏ.ஜி.சுஜித் மதுசங்க என்பவருக்கே தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

அவ்வழக்கு விசாரணையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும்.
  • பொலிஸாரின் சமிக்கையை கவனிக்காமல் சென்றமை.
  • வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லாமல் செலுத்தியமை.
  • காப்புறுதி இல்லாமல் செலுத்தியமை.
  • தலைக்கவசம் இல்லாமல் சென்றமை.
  • இரு பக்க கண்ணாடிகளும் இல்லாமல் இருந்தமை.
மோட்டார் சைக்கிளில் காணப்பட்ட சைலன்சரை மாற்றி வேறு சைலன்சர் செய்தமை போன்ற காரணங்களினாலேயே இத்தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved