அதிர்ச்சித் தகவல் - ஒரு நாளைக்கு 8 பேர், 8 மாதக் காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 1800 பேர் மரணம்

Published On Monday, 11 September 2017 | 12:39:00

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 1800 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய பாரிய வாகன விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 1708 ஆகும்.

வாகன விபத்துக்களில் அதிகளவில் பாதசாரிகளும், மோட்டார் சைக்கிள்களில் செல்வோருமே உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த எட்டு மாத காலப் பகுதியில் 533 பாதசாரிகளும், 586 மோட்டார் சைக்கிளில் பயணித்தோரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, வாகன விபத்துக்களினால் 142 சாரதிகள் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 233 முச்சக்கர வண்டி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 214 ஆகும்.

நாள் தோறும் சராசரியாக வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பதுடன் 20 பேர் வரையில் காயமடைகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved