தங்க மோதிரத்தைத் தொலைத்த 7 வயதுச் சிறுமிக்கு தாயார் வழங்கிய கொரூரத் தண்டனை!

Published On Sunday, 17 September 2017 | 12:56:00


தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில் தனது 7 வயதுச் சிறுமிக்கு, கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அச்சிறுமியின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்வம், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.

மத்ரசாவுக்கு சென்று திரும்பிய   மேற்படி சிறுமி. வீடு திரும்பும் போது அவள் அணிந்திருந்த மோதிரம் இல்லாதிருப்பதைக் கண்ட தாய் ஆத்திரப்பட்டு, சிறுமிக்கு நெஞ்சுப் பகுதி, கால்பாதம், கைகள், வயிற்றுப் பகுதி ஆகியற்றில் கரண்டியால் சூடு வைத்துள்ளார்.

சிறுமியின் அவலக் குரல் கேட்ட அயலவர்கள், இந்த விபரீதத்தைப் பொலிஸாருக்கு அறிவித்தள்ளனர்.

உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததோடு, தாயைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட தாயை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தாய்தான் தனக்கு சூடு வைத்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் சிறுமி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

News By: -ஏ.எச்.ஏ. ஹுஸைன்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved