மியன்மாரில் இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கியர்களுக்காக 500 000 டொலர்களை வழங்கியது கத்தார் செரிட்டி!

Published On Monday, 11 September 2017 | 13:55:00

கத்தார் அறநெறி (Qatar Charity) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையாளர் (UNHCR) மியன்மாரில் இடம்பெயர்ந்த ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். $500,000 பெறுமதியான ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு 2,100 பேருக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் செரிட்டி சார்பாக QC Yousif Ahmed Al Kuwari அவர்களும் மற்றும் யூ.என்.எச்.சி.ஆர் சார்பாக பிராந்திய பிரதிநிதி வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் காலித் கலீஃபா அவர்களும் இந்த உடன்படிக்கையில் டோஹாவில் வைத்து கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், UNHCR 420 தற்காலிக முகாம்களில் ரோஹிங்யர்கள் தங்க வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கியமான சந்தர்ப்பங்களில் விரைவான செயல்பாட்டு நிவாரண திட்டங்களை  சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் இணைந்து மனிதாபிமான உதவிகள் வழங்குதல் கத்தார் செரிட்டியின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் தான் மியன்மாரில் இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்க முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்துள்ளது. 

கடந்த ஜுன் 5ம் திகதி இடம்பெற்ற கத்தார் - சவூதிக் கூட்டணி முறுகலைத் தொடர்ந்து மேற்படி கூட்டணி பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக கத்தார் செரிட்டி யை அடையாளப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் - கத்தாரி செரிட்டி இணையம்
தமிழில் - உண்மையின் பக்கம்


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved