இவர்களா தீவிரவாதிகள்! 40 நாள் ரோஹிங்ய குழந்தை நீரில் மூழ்கி மரணித்த நெஞ்சை உருக்கும் சம்பவம்

Published On Tuesday, 19 September 2017 | 17:04:00

மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உயிருக்கு பயந்து வங்கதேசத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதுவரை நான்கு லட்சம் மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு வந்துள்ளனர், இவர்கள் தங்க முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மியான்மரிலிருந்து 18 பேர் வங்கதேசம் நோக்கி புறப்பட்டனர், இதில் நஷீர் அகமது என்பவரும் இரண்டு குழந்தைகளுடன் பயணமானார்.

படகு கரையை எட்டிய போது அலையில் சிக்கியது, இதில் நஷீர் அகமதுவின் மனைவி ஹமீதாவின் கையில் இருந்து 40 நாள் குழந்தை தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தது.

இறந்த குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு ஹமீதாவும், நஷீர் அகமதும் கண்ணீர் சிந்தும் புகைப்படம் வெளியாகி நெஞ்சை உருக்குகிறது.Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved