கிருஷ்ண ஜெயந்தி 3 வயது குழந்தையை இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம்!

Published On Friday, 15 September 2017 | 01:26:00

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயது குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை அன்று தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்வார்கள், மேலும் பல்வேறு வகையான பலகாரங்களை செய்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணரை வரவேற்பார்கள்.

இந்நிலையில் கேரளாவின் கண்ணுர் பகுதியில், 3 வயது குழந்தையை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்து செயற்கையான அரசமர இலையில் கட்டி வைத்துள்ளனர்.

ஒரு வாகனத்தின் உதவியுடன் அரச இலையை கட்டி, அதில் இந்த சிறுவனை கட்டிவைத்துள்ளனர், சுமார் இரண்டரை மணிநேரம் இந்த குழந்தை இலையில் தொங்கியபடி இருந்துள்ளது.

இந்த காட்சியை பையனூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் உஷா பிரபாகரன் என்பவர் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலில் இதனை நான் சிலை என்று நினைத்தேன், ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தையின் கால்கள் லேசாக அசைந்தன, அதன்பின்னர் தான் தெரியவந்தது அது உண்மையான குழந்தை என்று.

நான் இதுகுறித்து அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தேன், ஆனால் யாரும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு எதிராக பலரும் எதிர்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கண்ணுர் போலீ சார் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை, அப்படி வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியுள்ளனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved