இடம்பெயர்ந்த ரோஹிங்யர்களுக்கு 2.5 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியது ..

Published On Saturday, 16 September 2017 | 09:00:00

பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள மியன்மார் அகதிகளுக்கு அவரசர நிதியுதவியாக கனடா 2.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதனை ஐ நாவின் ஊடாக பங்களாதேஷுக்கு வழங்க கனடா நடவடிக்கை எடுத்துள்ளது .

மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்காளதேசத்திற்கும், இந்தியாவிற்கும் தப்பியோடி உள்ளனர்.

இதற்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் நாட்டின் தலைவராகவும், அரசின் ஆலோசகராகவும் உள்ள ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தொலைபேசி மூலம் கதைத்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜஸ்டின் கோரியிருந்தார்.

மியான்மரின் தார்மீக மற்றும் அரசியல் தலைவராக உள்ள ஆங் சான் சூகியிடம், ராக்கீன் பகுதியில் ரோஹிங்கியா இனத்தவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது கவலையையும் ஜஸ்டின் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved