மத்ரசாவில் தீ .. 25 (ஹாபிஸ்) மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு. #மலேசியாவில் சம்பவம்.(படங்கள் - வீடியோ)

Published On Thursday, 14 September 2017 | 14:41:00

(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்) மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மதரஸா செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மதரஸாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி மதரஸா விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் பலியாகியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதரஸாவில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லைShare this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved