Breaking News

பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி 2024–ம் ஆண்டு நடக்கிறது ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவிப்பு

பாரீஸ் நகரில் ஒலிம்பிக்போட்டி 2024-ம் ஆண்டு நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 32–வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020–ம் ஆண்டு நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமம் கோரி பாரீஸ் நகரமும் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் (அமெரிக்கா) ஒலிம்பிக் கமிட்டியிடம் விண்ணப்பித்தன. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேலும் 4 ஆண்டுகள் காத்திருந்து 2028–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒப்புக் கொண்டது. 

இந்த நிலையில் பெரு தலைநகர் லிமாவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை பாரீசுக்கும், 2028–ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

No comments