'ஜூம்ஆ' தினத்தில், 2 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களால் நிரம்பி வழிந்தது மக்கா, மதினா புனிதப்பள்ளிகள் ! (படங்கள்)

Published On Sunday, 10 September 2017 | 09:45:00

ஹஜ் புனித யாத்திரையின் கடமைகள் நிறைவுற்ற நிலையில் நேற்று வெள்ளியன்று நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையின் போது மக்கா மற்றும் மதினாவில் உள்ள இரு ஹரம் ஷரீஃப் பள்ளிகளும் சுமார் 2 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களால் நிரம்பி வழிந்தது.

புனிதப்பள்ளிகளின் அனைத்து தளங்களும், வெளிப்புற வராண்டா பகுதிகளும், சாலைகளும், உட்புற சந்துகளும், புனிதப்பள்ளிகளை சுற்றியுள்ள கட்டிடங்களின் மொட்டை மாடிகளும் மனித வெள்ளத்தால் நிரம்பியிருந்தன.

புனித மக்காவிலுள்ள (கஃபத்துல்லாஹ்) பள்ளியில் இமாம் கதீப் ஷேக். காலித் அல் காம்தி அவர்களும், மதினாவிலுள்ள மஸ்ஜிதுன்னபவியில் இமாம் கதீப் ஷேக். அப்துல் மொஹ்சீன் அல் கஸீம் அவர்களும் அல்லாஹ்விற்கும் அவனது தூதர் முஹமது (ஸல்) அவர்களுக்கும் செவிசாய்த்து முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்கள்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved