உங்களுக்குத் தெரியுமா? சவூதி அரேபியாவின் மக்கா சனத்தொகையில் 15% ரோஹிங்கிய முஸ்லிம்கள்!

Published On Saturday, 9 September 2017 | 17:56:00

மியான்மர் முஸ்லிம்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதாகை ஏந்தியுள்ள காட்சி...

பொதுவாக தேர்தலை கொண்டு ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் நாடுகள் அவர்கள் செய்யும் உதவிகளை தேர்தலை கவனத்தில் கொண்டு அரசின் செலவிலே விளம்பரமும் செய்வார்கள்.

சவூதி அரேபியா மன்னராட்சி கொண்ட நாடு என்பதால் செய்யும் உதவிக்கு விளம்பரம் தேடாது. சவூதி அரேபியா செய்யும் பெரும்பாலான உதவிகள் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படாது.

நேரடியாக சவூதி அரேபியா மியான்மர் மீது போர் தான் நடத்தவில்லையே தவிர மீதமுள்ள ஏராளமான உதவிகளை செய்துள்ளது.

அறிந்து கொள்ளுங்கள்...

மக்கா மாநகரில் வசிக்கும் வெளிநாட்டினரில் 15 சதவீத மக்கள் மியான்மர் முஸ்லிம்கள்.

சவூதி அரேபியா முழுவதும் 2.5 லட்சம் மியான்மர் அகதிகள் ஆயுட்கால இகாமா வசதிகளுடன் (அரைவாசி பிரஜை கொண்ட உரிமையோடு) வாழ்கின்றனர்.

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றி சர்வதேச சமூகத்தை அழுத்தம் கொடுக்க வைத்தது சவூதி அரேபியா...

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக 50 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

சவூதி அரேபியாவில் வாழும் மியான்மர் அகதிகளிடம் அரபியில் பேசினால் அவர்கள் சவூதியர்கள் என்று எண்ணும் அளவிற்கு அவர்களின் நிலை உள்ளது.

இப்படி சவூதி அரேபியா விளம்பரம் இல்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved