வரதட்சனை பணத்துக்கு ஆசைப்பட்டு 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது!

Published On Monday, 11 September 2017 | 13:18:00

தாய்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் வரதட்சனை பணத்துக்கு ஆசைப்பட்டு 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிரியா பார்ன் என்ற 32 வயதான பெண் தாய்லாந்தின் நங் ஹாய் மாகணத்தை சேர்ந்தவர்.

தாய்லாந்து நாட்டு வழக்கப்படி ஆண் தான் பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்ய வேண்டும். இதனை ஜிரியா பார்ன் பணம் சம்பாதிக்கும் யுக்தியாக பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே திருமணமான ஜிரியா 11 ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வசதியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அதன் பின்னர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் திட்டமிட்டு பிரிந்துள்ளார். இதனையடுத்து ஜிரியா பார்னிடம் ஏமாந்த ஆண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ஜிரியா பார்னை அவரது சொந்த ஊரில் கைது செய்தனர்.

ஜிரியா பார்ன் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டுதான் ஆண்களை மயக்கியதாக கூறப்படுகிறது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved