மாத்தறையில் பாடசாலை மாணவனை சேர்க்க 10,000 இலஞ்சம் பெற்ற அதிபர் கைது!

Published On Wednesday, 13 September 2017 | 09:42:00

பாடசாலை மாணவனை சேர்ப்பதற்கு ரூபா 10,000 இலஞ்சம் பெற்ற அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை, அகுரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட, தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் அதிபரே (47) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (12) பிற்பகல், தரம் 3 இற்கு மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முயன்ற வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம், வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த அதிபர், பாடசாலைக்கு மாணவர்களை சேர்க்கும் போது இலஞ்சம் பெறுவதாக, பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால், குறித்த நபர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம், கொட்டவில பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்ற பின், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved