இலங்கையில் 1000 ரூபாவாக மாற இருக்கும் சிக்ரட் பக்கட்டின் விலை!

Published On Tuesday, 12 September 2017 | 12:33:00

சிகரட் பக்கட் ஒன்றின் விலையை ஆயிரம் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டளவில் புகையிலை செய்கை முற்று முழுதாக தடை செய்யப்படும், ஒரு பக்கட் சிகரட்டின் விலை ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் மீதான வரி 90 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் புகை பிடித்தல் 48 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. புகையிலை உற்பத்திக்கான வரி விதிப்பு வெற்றியளித்துள்ளது.

பாடசாலைகளை அண்டிய 500 மீட்டர் சுற்று வட்டத்தில் சிகரட் விற்பனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் விரைவில் சட்டங்கள் இயற்றப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved