மியன்மார் இராணுவத்துக்கு இஸ்ரேல் ஆயுத சப்ளை. ( 100 யுத்தத் தாங்கிகள், ஆயுதங்கள் மற்றும் படகுகள்)

Published On Sunday, 10 September 2017 | 10:01:00

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதிலும், மியன்மார் இராணுவத்துக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த ஆயுத விற்பனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். குறித்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணை செய்யப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் “விடயம் தெளிவாக இராஜதந்திர ரீதியானது” என குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 100 யுத்தத் தாங்கிகள், ஆயுதங்கள் மற்றும் படகுகள் மியன்மார் இராணுவத்துக்கு இஸ்ரேல் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகுகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியே நாட்டின் எல்லை பகுதியில் ரோஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை மியன்மார் இராணுவம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மியன்மாரில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய முன்னாள் பொலிஸ் ஆணையாளர் தலைமையில் இயங்கும் இராணுவ பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் இஸ்ரேலிய நிறுவனமொன்று அதன் இணையத்தளத்தில் கடந்த ஆண்டு பதிவிட்டிருந்தது.

மியன்மார் இராணுவம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஐக்கிய நாடுகள் சபையும் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved