இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள்! குழப்பத்தில் நாட்டு மக்கள் - VIDEO

Published On Thursday, 3 August 2017 | 01:22:00

இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் அடையாளம் காணப்படாத வெளிச்சம் தொடர்பில் பலர் குழப்பமடைந்துள்ளனர்.
X அடையாளத்தை போன்று வானில் தோன்றும் இந்த வெளிச்சத்திற்கு பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையின் பல பகுதிகளில் தோன்றியுள்ள இந்த வெளிச்சத்தை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கும் போது இந்த வெளிச்சம் ஆங்கில எழுத்தங்களின் X எழுத்து போன்றுள்ளது.
மணிக்கும் 30 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த வெளிச்சம் தோன்றி மறைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இது வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். எனினும் இந்த வெளிச்சம் தெளிவாக தெரிவதனால் இது வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளும் ஏதாவது ஒரு பரிசோதனையினால் தோன்றுவதாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை தொடர்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவின் இரகசிய விமானத்தினால் ஏற்படுகின்ற வெளிச்சமாக இருக்கலாம் என இன்னும் பலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதனால் இந்த வெளிச்சம் ஏற்பட்டுள்ளதென தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு மற்றும் 11 போன்ற நேரங்களில் வெளிச்சம் மக்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், இதுவரை கேட்காத சத்தம் ஒன்றும் இந்த வெளிச்சத்துடன் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த வெளிச்சத்தினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இது என்ன என உரிய முறையில் தகவல் வெளியாகும் வரை மக்களை பதற்றமடைய வேண்டாம் எனவும் ஆய்வாளர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved