Wednesday, 16 August 2017

VIDEO - சவுதி ஜித்தா வரலாற்று மையத்தில் நேற்று இரவு பாரிய தீ விபத்து! 6 கட்டிடங்களில் 3 சாம்பல்!

சவுதியின் Al-Balad மாவட்டத்தில் உள்ள  வரலாற்று மையம் அமைத்துள்ள இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கட்டிடங்கள் எரிந்துசாம்பலாகியுள்ளன. அவற்றில் 3 கட்டிடங்கள் முழுமையாக எரிந்துள்ளதாகவும் 3 கட்டிடங்கள் பகுதியளவில் எரிந்துள்ளதாகவும் அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த கட்டிடங்களில் தங்கியிருந்த  மக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். இரவு 10 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. Al-Balad என்பது ஜித்தாவின் வரலாற்று இடமாகும்.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயினை அணைத்து என்று அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் பற்றி விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Author: verified_user

0 comments: