மகிழ்ச்சியான செய்தி - Flyadeal என்ற பெயரில் புதிய பட்ஜட் விமானச் சேவையை அறிமுகம் செய்கிறது சவூதி அரேபியா!

Published On Saturday, 26 August 2017 | 09:57:00

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட சவுதி அரேபியாவின் புதிய குறைந்த கட்டண பட்ஜெட் (Low Budget) விமான நிறுவனம் 'ஃபிளையடீல்' (Flyadeal) தனது சேவையை மிக விரைவில் துவங்கவுள்ளது. இந்த சேவை உள்நாடு மற்றும் வெளிநாட்டு வான்வெளித் தடங்களில் (Domestic & International Routes) நடத்தப்பெறும்.


இந்த விமான நிறுவனத்திற்காக புத்தம்புதிய 8 ஏர்பஸ் A320 மாடல் விமானங்களை குத்தகைக்கு தர துபையை சேர்ந்த விமான குத்தகை நிறுவனமாக DAE எனப்படும் துபை ஏரோஃபேஸ் என்டர்பிரைஸஸ் (Dubai Aerospace Enterprises) நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தப்படி தனது முதலாவது விமானத்தை ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள ஏர்பஸ் விமான கட்டுமான வளாகத்தில் வைத்து முறைப்படி 'ஃபிளையடீல்' நிறுவனத்திடம் ஒப்படைத்தது.துபை ஏரோஃபேஸ் என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே துபையின் எமிரேட்ஸ், பிளைதுபை உட்பட பல நிறுவனங்களுக்கு பயணியர் மற்றும் சரக்கு விமானங்களையும் உலக நாடுகள் பலவற்றிற்கும் குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved