FIFA உலகக் கிண்ணம்.. அரேபியத் தொப்பி வடிவ மைதானம் கட்டார் - துமாமா பகுதியில் (படங்கள் - வீடியோ)

Published On Tuesday, 22 August 2017 | 12:14:00

2022ஆம் ஆண்டு, பிபா உலகக் திண்னக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது.

அதன் ஒருபகுதியாக, தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.

தலைநகர் டோஹாவில் அமைக்கப்படவிருக்கும் அல் - துமாமா மைதானம், பாரம்பரிய காஃபியா எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் அமைய இருக்கிறது.

40,000 பேர் வரை அமரக்கூ டிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், கட்டாரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இந்த மைதானத்தை அரேபியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.




Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved