கத்தாரில் இருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கான முழுச்செலவையும் தாமே ஏற்றுக்கொள்வோம் சவூதி மன்னார் அதிரடி அறிவிப்பு....!

Published On Friday, 18 August 2017 | 03:35:00

ஹஜ் பயணிகளுக்காக கத்தார் நாட்டுடனான  அபு சாம்ரா தரைமார்க்க எல்லையைத் திறக்க சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

கத்தாரில் இருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கான முழுச் செலவையும் தாமே ஏற்றுக் கொள்ள இருப்பதாக மன்னர் சல்மான் அறிவித்திருக்கிறார்.

ஹஜ் பயணிகளை அழைத்து வருவதற்காக தனி விமானங்கள் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி சவூதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகள் கத்தார் பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதாகக் கூறி அந்நாட்டுடனான உறவைல்த்) துண்டித்துக் கொண்டன. சவூதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையேயான அபு-சாம்ரா சல்வா நெடுஞ்சாலை
மூடப்பட்டது.

அதன் பிறகு முதல் முறையாக சவூதி அரசிடம் இருந்து நேர்மறையான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும் கத்தார் நாட்டு அரசு இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
(முஹம்மது ஹாசில்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved