இலங்கைக்கு நேராக சூரியன் - இன்று முதல் கடும் சூடு நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Published On Sunday, 27 August 2017 | 10:24:00

இலங்கைக்கு நேராக இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, இன்று மதியம் 12.12 மணியளவில் கோவிலான் பொய்ன்ட், சங்கானை, முளாய், மல்லாகம் மற்றும் வரணி ஆகிய பகுதிக்கு மிக அருகில் சூரியன் உச்சம் கொடுக்கும்.



இதேவேளை நாட்டின் ஊடாக மணிக்கும் 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



விசேடமாக ஊவா, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கடும் காற்று வீடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



அனுராதபுரம் 35
திருமலை 34
யாழ்ப்பாணம் 33
கொழும்பு  31 பாகை செல்ஷியஸ் வெப்பம் இன்று காணப்படும்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved