Monday, 7 August 2017

தாய் மாமனுடன் கள்ளக்காதல்: கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி!

கணவரை கொலை செய்து விட்டு அவர் மாயமானதாக நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள முகலிவாக்கத்தை சேர்ந்தவர் அன்பழகன் (29) இவர் மனைவி நதியா (23) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 29.3.2017 ஆன்று நதியா, தனது கணவர் 17.3.2017 முதல் காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார்.

கணவர் மாயமாகி இத்தனை நாட்கள் கழித்து ஏன் புகார் அளிக்கிறீர்கள் என நதியா மீது பொலிசார் சந்தேக கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதற்கு, அன்பழகனுக்கு குடிபழக்கம் இருந்ததாகவும் அவர் குடிபோதையில் உறவினர் வீடுகளுக்கு சென்று தங்கி இருப்பார் என்று நினைத்து இருந்ததாகவும், அதனால் தற்போது புகார் செய்வதாகவும் நதியா கூறினார்.

இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில், அன்பழகனின் தந்தை சந்திரன் பொலிசில் புது புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அன்பழகன் காணாமல் போன நாளிலிருந்து நதியா வீட்டுக்கு அவர் தாய்மாமன் நாகராஜன் அடிக்கடி வருவதாகவும், அதில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நதியாவின் செல்போன் நம்பரை பொலிசார் ஆய்வு செய்தனர். கடந்த நான்கு மாதங்களாக நதியா தனது தாய்மாமன் நாகராஜனுடன் அதிகம் போனில் பேசியதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நாகராஜன், நதியா இருவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் நதியா, கணவர் அன்பழகனை கொலை செய்து விட்டு அவர் மாயமானதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், திருமணத்துக்கு முன்பே தாய்மாமன் நாகராஜனுடன் (23) நதியாவுக்கு தொடர்பு இருந்துள்ளது.

திருமணத்துக்கு பின்னரும் கள்ளத்தொடர்பை நதியா தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், குடிபழக்கம் கொண்ட அன்பழகன் தினமும் குடித்து விட்டு நதியாவை அடித்துள்ளார்.

இதையடுத்து விரக்தி அடைந்த நதியா தனது கணவரை கொன்று விட்டு நாம் நிம்மதியாக வாழலாம் என நாகராஜனிடம் கூறியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று நாகராஜனும், அன்பழகனும் வெளியில் சென்று மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அன்பழகனை நாகராஜன் கடுமையாக தாக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அன்பழகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

பிறகு அதே இடத்தில் அன்பழகனை குழி தோண்டி நாகராஜன் புதைத்தார்.

பொலிசுக்கு சந்தேகம் வராமல் இருக்க பிறகு நதியா கணவர் காணவில்லை என பொய் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் நதியா மற்றும் நாகராஜனை கைது செய்தார்கள்.

Author: verified_user

0 comments: