Saturday, 5 August 2017

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் பணி தீவிரம்!

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள், பாஸ்போர்ட், இக்காமா புதுப்பிக்காதவர்கள் அல்லது புதுப்பிக்க இயலாதவர்கள் மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளால் சவுதியிலேயே தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு வழங்கிய நான்கு மாத பொதுமன்னிப்பு காலம் சென்ற வாரம் நிறைவடைந்தது. சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி சவூதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் இந்தியர்கள் 31 ஆயிரம் பேர் அதில் கூடுதலாக உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். எனினும் பொதுமன்னிப்பை பயன்படுத்தாத இந்தியர்கள் இன்னும் சவூதியில் இருக்கக்கூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஏற்கனவே எச்சரித்தபடி பொது மன்னிப்பை பயன்படுத்தி சவூதியை விட்டு வெளியேறாமல் இருந்த வெளிநாட்டவரை கைது செய்யும் பணியை சவூதி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இக்காமா புதுப்பிக்காதவர்கள், வேறொரு ஸ்பான்சரிடம் வேலை செய்பவர்கள் மேலும் பொதுமன்னிப்பை பயன்படுத்தாதவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டால், 6 மாத சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டு பின்பு நாடு கடத்தப்படுவர். மேலும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் சவூதிக்கு வர இயலாது. என்று ஏற்கனவே சவூதி அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.(Inneram)

Author: verified_user

0 comments: