இலங்கையில் ஒரு கொய்யா பழத்தினால் பரிதாபமாக உயிரை விட்ட பாடசாலை மாணவி!

Published On Friday, 18 August 2017 | 20:26:00

ஊவா பரணகம பிரதேசத்தில் வீட்டுத்தோட்டத்திலிருந்த கொய்யா மரத்திலிருந்து கொய்யாப்பழம் பறித்து உண்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதினாறு வயதுடைய மாணவி பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்ததும் வீட்டுத் தோட்டத்திலுள்ள கொய்யா மரத்திலுள்ள கொய்யாப்பழத்தை பறித்து உண்ட சிறிது நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

மயக்கமுற்று வீழந்த சிறுமியை வீட்டார் உடனடியாக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தியத்தலாவ வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சிறுமியின் தந்தை வீட்டுத்தோட்டத்திலுள்ள கொய்யா மரத்திற்கு கிருமிநாசினி தெளித்துள்ளார் எனவும் அதை அறிந்திராத சிறுமி கொய்யா மரத்திலுள்ள பழத்தை பறித்து உண்டதாலேயே குறித்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved