Breaking News

வட கொரியாவின் ஏவுகணைகளால் அமெரிக்க முழுதும் தாக்க முடியும் - அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்

வட கொரியாவில் அமெரிக்க முழுவதும் ஏவுகணைகளால் தாக்க முடியும் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனியன்று இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் வட கொரியா வெற்றிகரமாக இதுவரை இல்லாத தூரத்திற்கு தனது ஏவுகணையை ஏவியுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இச் சோதனையை பார்வையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கிம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடும் தொனியிலேயே இச்சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள் ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்தும் விஷயத்திலேயே கவனம் செலுத்துவதாகவும் இதன் மூலம் பன்னாட்டு அங்கீகாரம் பெற முயல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வட கொரியாவின் மீது அமெரிக்கா தாக்கும்பட்சத்தில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதே கிம்மின் எச்சரிக்கை.

அதிகாரிகள் தங்களின் பெயர்களை வெளியிடவில்லை. 

கிம்மின் நடவடிக்கை அதிபர் டிரம்பிற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. வட கொரியா மீது ஐநாவின் தடைகளை சீனாவிடம் அமல்படுத்த அமெரிக்கா வலியுறுத்தினாலும் இவ்விஷயத்தில் வட கொரியாவும். அமெரிக்காவுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி நழுவிக்கொள்கின்றது சீனா. தனது சகாக்களான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் அமெரிக்கா தீவிரமாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேசி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வட கொரியாவின் சமீபத்திய சோதனை புவிவிசையைக் கடந்து மேலே சென்று மீண்டும் பூமிக்குள் நுழையும் ஆற்றல் பெற்றிருந்தாலும் அமெரிக்காவைத் தாக்க தரை மட்டத்திலேயே பாய்ந்து செல்லும்படியாக செலுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. ஹாவசாங்-14 எனும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை (கொரிய மொழியில் செவ்வாய் என்று பொருள்) 3,724.9 கிமீ உயரமாக எழும்பி 998 கிமீ தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணை பல கட்டங்களைக் கடந்து சோதனையில் வெற்றி கண்டது என்பதால் ஆபத்தின் தன்மை அதிகம் என்கின்றனர் ராணுவ வல்லுநர்கள். 

No comments