Breaking News

இலங்கை - கட்டார் நான்காவது தினசரி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன

இலங்கை - கட்டார்,  ஆகிய நாடுகளுக்கிடையிலான நான்காவது தினசரி விமான சேவையை, நேற்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் கொழும்புக்கும் கட்டாருக்கும் இடையில் மூன்று தினசரி விமான சேவைகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்தன. ஆனால் நேற்று முதல் நான்காவது தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், எனினும் இலங்கையிலிருந்து அதிகரித்து வரும் பயணக் கோரிக்கைகளுக்கு ஏற்றவகையில், நான்கு தினசரி விமானங்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும், கட்டார் எயார்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"தெற்காசியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான கொழும்பில், எங்கள் சேவைகள் மற்றும் திறன்கள் என்பவற்றை அதிகரிப்பதன் மூலம், மிதமான ஓய்வுப் பயணங்கள் மற்றும் வணிகப் பயணத் தேவைகள் போன்றவற்றைப் பூர்த்தி செய்வது குறித்து நாம் பெருமிதம் அடைகின்றோம்" என, கட்டார் எயார்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் - பேக்கர் தெரிவித்துள்ளார்.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள விமானங்களை நேர விபரங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

தினமும் கட்டாரிலிருந்து இலங்கை செல்லும் விமான விபரங்கள்

தினமும் இலங்கையிலிருந்து கட்டாருக்குச் செல்லும் விமான விபரங்கள்


No comments