Tuesday, 1 August 2017

பேஸ்புக் + வட்ஸப்பில் இஸ்லாமிய அடிப்படையில், மிக முக்கியமாக அறியவேண்டியவை..!

(சமூக வலைத்தளங்களை ஓர் அருளாக பயன்படுத்துவோம் -T.M.Mufaris Rashadi-) 
அல்லாஹ் தனது திரு­ம­றையில் நாம் ஒவ்­வொரு ரஸூல்மாரையும் அக்­கூட்­டத்தார் பேசு­கின்ற மொழி பேசு­ப­வ­ரா­கவே அனுப்பி வைத்தோம் என்­கிறான். ஸூரா இப்­ராஹீம் -04 வது வசனம். இந்த வச­னத்தில் வந்­துள்ள (லிஸானுல் கௌம்) என்ற சொல் ஒரு கூட்­டத்­தாரின் மொழி, பாஷை அதையும் தாண்டி அவர்­க­ளது காலத்தில் செல்­வாக்குச் செலுத்­து­கின்ற ஊடகம் என்றும் கருத்துக் கொள்­ளலாம். அதற்கு உதா­ர­ண­மாக நபி­ய­வர்­களின் ஸீரா­வி­லி­ருந்து தகுந்த விளக்­கங்­களை பெற்­றுக்­கொள்ள முடி­கி­றது.  முதன் முத­லாக நபி­ய­வர்கள் தமது பகி­ரங்க தஃவாவை மேற்­கொள்ள தேர்ந்­தெ­டுத்த இடம் ஸபா என்ற மலை­யாகும். அங்­கி­ருந்­துதான் மக்கா வாசி­களை அழைத்து தனது தூதுச் செய்­தியை எத்தி வைத்­தார்கள். 

அன்று அந்த மலைதான் மிகப்­பெரும் ஊட­க­மாகத் திகழ்ந்­தது. அத­னையே நபி­ய­வர்கள் தனது தஃவா­விற்கு பயன் படுத்­தி­யுள்­ளார்கள்.  இன்று நாம் வாழ்­கின்ற உலகம் அறிவும் தொழி­நுட்­பமும் வளர்ச்­சி­ய­டைந்த கால­மாகும். 

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், வாட்ஸப், வைபர், கூகுள் ப்ளஸ் இது போன்­ற­வை­களால் தீங்­குகள் பல சமூ­கத்­துக்கு இருந்­தாலும் இவை இன்­றைய உலகில் தவிர்க்க முடி­யாத ஒன்­றாக மாறி­யி­ருக்­கின்­றன. அந்த வகையில் சமூக வலைத்தளங்­களை ஓர் அரு­ளாக பயன்­ப­டுத்­து­வ­தற்­கான சில வழி­காட்­டல்­களை இங்கு தர முனை­கிறோம். 

1.- உண்­மையை மட்டும் பேசுதல், எழு­துதல், பகிர்தல் என்­பதே அடிப்­படை. 
உண்மை பேசுதல், வாழ்வில் உண்­மையை கடைப்­பி­டித்தல் என்­பது வாழ்க்­கையின் அடிப்­படை அம்­ச­மாகும். இைணய உல­கிலும் பொய் தவிர்க்­கப்­பட்டு இந்த உண்மை பிர­யோ­கிக்­கப்­பட வேண்டும். இல்­லையேல் நாளை மறு­மையில் அதற்கும் நாம் இறை­வ­னிடம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற விட­யத்தை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.  அப்­துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறி­விக்­கி­றார்கள்: –

நபி (ஸல்) அவர்கள் அரு­ளி­னார்கள்: நிச்­ச­ய­மாக உண்மை என்­பது நன்­மைக்கு வழி காட்­டு­கி­றது. நன்மை சுவனம் செல்ல வழி­காட்­டு­கி­றது. திண்­ண­மாக ஒரு மனிதன் உண்­மையே பேசிக்­கொண்­டி­ரு­கிறான். இறு­தியில் அல்­லாஹ்­வி­டத்தில் உண்­மை­யாளன் என்று எழு­தப்­ப­டு­கிறான்!

மேலும் திண்­ண­மாக பொய் என்­பது தீமை செய்ய வழி­காட்­டு­கி­றது. தீமை செய்­வது நர­கத்­திற்கு வழி­காட்­டு­கி­றது. திண்­ண­மாக ஒரு­ம­னிதன் பொய் பேசிக்­கொண்­டி­ருக்­கிறான். இறு­தியில் அல்­லாஹ்­வி­டத்தில் மகாப் பொய்யன் என்று எழு­தப்­ப­டு­கிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

2.- உள்­ளங்­களில் உதிப்­ப­வைகள் அனைத்­தையும் பகிர்ந்து கொள்­வதை தவிர்ந்து கொள்வோம்.

நமது சிந்­த­னையில் உதிப்­ப­வைகள், பிறரைப் பற்­றிய யூகங்கள், கற்­ப­னை­களை உண்மை போன்று பதி­வி­டு­வதை நாம் தவிர்ந்துகொள்ள வேண்டும். 

அல்லாஹ் தனது திரு­ம­றையில்; நம்­பிக்கை கொண்­டோரே! சந்­தே­க­மான பல எண்­ணங்­க­ளி­லி­ருந்து விலகிக் கொள்­ளுங்கள்! நிச்­ச­ய­மாக எண்­ணங்­களில் சிலது பாவ­மாகும்.  என்று (49:12)இல் குறிப்­பி­டு­கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு­வார்கள்."பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்­வது குறித்து உங்­களை நான் எச்­ச­ரிக்­கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்­சுக்­க­ளி­லேயே மிகவும் பொய்­யா­ன­தாகும். (மற்­ற­வர்­களின் குறை­களை) துருவித் துருவி ஆரா­யா­தீர்கள். ஒட்டுக் கேட்­கா­தீர்கள். ஒரு­வ­ருக்­கொ­ருவர் பொறாமை கொள்­ளா­தீர்கள்.ஒரு­வ­ரை­யொ­ருவர் வெறுத்துக் கொள்­ளா­தீர்கள். ஒரு­வ­ரை­யொ­ருவர் பகைத்துக் கொள்­ளா­தீர்கள். அனை­வரும் சகோ­த­ரர்­களாய் இருங்­கள்”­என்று மா நபி (ஸல்) அவர்கள் குறிப்­பிடும் இந்த செய்தி  புகாரி 5143 இல் இடம் பெற்­றி­ருக்­கி­றது. 

3.- செய்­தி­களின் உண்­மைத்­தன்­மை­யையும் பதி­வா­ளரின் நம்­பகத் தன்­மை­யையும் பரி­சீ­லித்துக் கொள்­ளுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: ‘ஒரு மனிதன் தான் கேள்­விப்­பட்­ட­தை­யெல்லாம் பேசு­வதே  அவன் பொய்யன் என்­ப­தற்கு போதிய சான்­றாகும்.  (முஸ்லிம்) 

அல்லாஹ் தனது திரு­ம­றையில் முஃமின்­களே!  பாஸிக் (தீயவன்) எவனும் உங்­க­ளிடம் ஒரு செய்­தியைக் கொண்டு வந்தால், அதனை தீர விசா­ரித்துக் கொள்­ளுங்கள்; (இல்­லையேல்) அறி­யா­மை­யினால் (குற்­ற­மற்ற) ஒரு சமூ­கத்­தா­ருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்­கள் ­செய்­தவை பற்றி நீங்­களே கைசே­தப்­ப­டு­ப­வர்­க­ளாக ஆகி­வி­டு­வீர்கள். (அல் குர்’ஆன் 49:6) 

ஹதீஸ்­களை அறி­விப்­ப­வர்கள் விட­யத்தில் முன்­னைய அறி­ஞர்கள் மேற்­கொண்ட குறித்த அறி­விப்­பா­ளரின் நம்­ப­கத்­தன்மை, நேர்மை பற்­றிய பரி­சீ­லனை வழி­மு­றையை இன்­றைய யுகத்­திலும் குறிப்­பாக செய்­தி­களை பரி­மாறிக் கொள்­வ­திலும் நாம் கடைப்­பி­டிக்க வேண்டும்.  நம்­மிடம் வரும் நல்ல செய்­தி­யாக இருந்தால்கூட  அச்­செய்தி ஆதா­ர­பூர்­வ­மா­னதா இல்­லையா? என தீர விசா­ரித்து அறிந்து கொள்­ளாதவரை அவ­ச­ர­மாக மக்­க­ளி­டையே பரப்ப வேண்டாம் என்றே அறி­ஞர்கள் அறி­வு­றுத்­து­கி­ன் றார்கள். ஏனென்றால், நமக்கு செய்­தியை அனுப்­பி­யவர் தவ­றா­ன­தையோ வதந்­தி­யையோ அனுப்­பி­யி­ருந்தால், மற்­ற­வர்­க­ளிடம் நமது நம்­ப­கத்­தன்மை குறித்து தவ­றான மனப்­ப­திவு ஏற்­பட்டு விடும். 

4-. பாவங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­துதல் மன்­னிக்­கப்­ப­டாத குற்­ற­மாகும்.
எனது உம்­மத்தில் அனை­வரும் மன்­னிக்­கப்­ப­டு­வார்கள், செய்த பாவத்தை மக்கள் மன்­றத்தில் பகி­ரங்கப் படுத்­தி­ய­வனைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.(புஹாரி)

நாம் செய்த பாவங்­களை ஆர்­வக்­கோ­ளா­றினால் நான் அப்­படிச் செய்தேன், இப்­படி செய்தேன் என பிற­ரோடு பகிர்ந்து கொள்­வது மிகப்­பெரும் பாவ­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. 

5.- கியாமத் நாள் வரை தொடரும் உங்கள் இணை­யக்­க­ணக்­குகள். 
நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்; நிச்­ச­ய­மாக ஒரு மனிதன்  தீமை­யற்­றது என எண்ணி கூறிய ஒரு சொல் அவன் நரக நெருப்பின் பாதா­ளத்தில் விழக்­கா­ர­ண­மா­கி­விடக் கூடும். (புஹாரி) 

ஒவ்­வொரு நன்­மை­யான காரி­யமும் குறைந்­தது ஒன்­றுக்கு பத்து  மடங்­காகப் பெருகும். ஆனால், ஒரு பாவம் அதன் எண்­ணிக்கை ஒன்­றாகத் தான் இருக்­குமே தவிர பெரு­காது  என்று அல்­குர்ஆன் கூறு­கி­றது. ஆனால்,  சமூக ஊட­கங்­களின் மூலம், தீய சொற்­களும், தவ­றான செயல்­களும், மீண்டும் மீண்டும் பலர் மூல­மாக பகி­ரப்­படும். நீங்கள் ஒரு­வரைப் பற்றி புறம் பேசி­யி­ருந்­தீர்கள், அவ­தூறு பரப்­பி­யி­ருந்­தீர்கள் என்றால், அதனை நூறு பேர் லைக் (Like) செய்து, பகிர்ந்­தார்கள் (Share) என்றால் அவர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யவர் நீங்கள் தான் என்ற வகையில் லைக் செய்த நூறு பேரின் பாவங்­க­ளையும் பகிர்ந்­த­வர்­களின் பாவங்­க­ளையும் பகிர்ந்­த­வை­களை பார்ப்­ப­வர்கள் என பட்­டியல் விரிந்து கொண்டே செல்லும். அதே நேரம் நாம் மர­ணித்­தாலும் கியாமத் நாள் வரை இணையக் கணக்­கு­களின் நன்­மையோ தீமையோ எங்­களை வந்­த­டைந்து கொண்டே இருக்கும். 

6.- இர­க­சி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். 
நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: மறுமை நாளில் அல்­லாஹ்வின் முன்­னி­லையில் மக்­க­ளிலே மிக மோச­மா­னவர் யாரென்றால், தனது மனை­வி­யுடன் அந்­த­ரங்­க­மாக இருந்து விட்டு அவ­ளு­டைய இர­க­சி­யங்­களை வெளியே பரப்­பு­ப­வர்தான்.(புஹாரி) 

மேலுள்ள செய்தி கணவன் மனை­விக்­கி­டையே நடக்­கின்ற தாம்­பத்­திய இர­க­சி­யங்­களை பரப்­பு­வதைப் பற்றி தான் குறிப்­பி­டு­கி­றது. அது போன்று பொது­வாக இன்று சமூக வலைத்­த­ளங்­களில் பிற­ரது ஆசையைத் தூண்டும் வித­மாக கணவர் கொடுத்த பொருட்­களின் படங்கள் அல்­லது அவ­ருடன் வெளியே சென்­ற­போது எடுத்த புகை­ப­டங்கள்,  மரு­தாணி போட்ட கைகள், முகம் தெரி­யாது பின் பக்க அமைப்பு போன்­ற­வற்றை பெண் சகோ­த­ரிகள் பதி­வி­டு­வ­தையும் தவிர்த்துக் கோள்­வதே சாலச்­சி­றந்­த­தாகும். இவை மிகவும் அந்­த­ரங்­க­மா­னவை மட்­டு­மல்ல பதி­விட தேவை­யற்­ற­து­மாகும். இதனை வெளிப்­ப­டுத்­து­வதால் இறை அன்பைப் பெறு­வதை விட்டும் உங்­களை தூர­மாக்கி விடு­கின்­றது. 

7-. நாம் மர­ணித்­தாலும் நமது பதி­வுகள் மர­ணிப்­ப­தில்லை. 
உங்­க­ளிடம் கூறப்­படும் “நீ உனது புத்­த­கத்தைப் படித்­துப்பார். இன்று உனக்கு எதி­ராக உன்­னு­டைய ஆத்­மாவே கணக்குச் சொல்லப் போது­மா­னது. (அல் குர்’ஆன்17:14] உங்­க­ளு­டைய கணக்கை நீங்கள் அழித்து வெகு நாட்கள் ஆகி விட்­டாலும், உங்­க­ளு­டைய செய­லேட்டில் அவை வாழ்ந்து கொண்­டி­ருக்கும் என்­ப­தனை சிந்­தித்து செயற்படவேண்டும்.  கால நேரங்கள் அல்­லாஹ்­வினால் எமக்கு வழங்­கப்­பட்ட அமா­னி­த­மாகும் அதனை நாம் நன்­மை­யான, பயனுள்­ள­வற்றில் பயன்­ப­டுத்­தி­னோமா. என மறு­மையில் வின­வப்­ப­டுவோம்,  உங்­க­ளு­டைய பதி­வேடு உங்கள் கையில் கொடுக்­கப்­படும் நாளில் முகநூல் பக்­கங்­களில் நீங்கள் பங்கு பெற்ற வீண் உரை­யா­டல்கள், வாட்­ஸப்­பிலும், டுவிட்­ட­ரிலும் நீங்கள் ஈடு­பட்ட வீண் அரட்­டைகள், குதர்க்­கங்கள் போன்­ற­வற்றைப் நமது சிந்­த­னையில் நிறுத்தி செயற்பட முயற்­சிக்க வேண்டும். 

8-. புறம் விபச்­சா­ரத்தை விட பயங்­க­ர­மா­னது. 
புறம் என்­பது பேசு­வதில் மட்­டுமல்ல எழுத்­திலும் அது இருக்­கின்­றது. நாம் பிற­ரைப்­பற்றி அவர்கள் வெறுக்­கின்ற விட­யங்­களை பகிர்ந்து கொள்­வதும் மிகப்­பெரும் பாவ­மாகும். அதுவும் புறம் பேசுதல் என்ற பகு­திக்குள் வந்து விடு­கி­றது. 

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்­ளத்தில் இல்­லாது உதட்டால் நம்­பிக்கை கொண்­ட­வர்­களே! (நய­வஞ்­ச­கர்­களே) முஸ்­லிம்­களைப் பற்றி புறம் பேசா­தீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின்தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின்தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

வட்டியில் எழுபத்திரெண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)

நவீன கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப சாதனங்கள், சமூக வலைத்தளங்கள் இவையனைத்துமே அடிப்படையில் இறைவன் மனிதனுக்கு வழங்கிய பெரும் அருட்களே இவைகளை மேற் சொன்ன எட்டு அடிப்படைகளையும் பேணி அவனது அருள்களையும் பொருத்தத்தையும் பெறும் நோக்கில் பயன்படுத்தி அதன் மூலம் ஈருலகிலும் ஜெயம் பெறுவோமாக!

Author: verified_user

0 comments: