Breaking News

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு காலம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் குறித்த பொது மன்னிப்பு காலம் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும். நாடு திரும்பும் பணியாளர்கள் இலங்கையர்கள் தொடர்பில் எதுவித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது எனவும் வேலைவாய்ப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments