ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்யனுமா? இந்த வழிகளைப் பின்பன்றுங்க!

Published On Monday, 7 August 2017 | 16:19:00

மொபைலில் சார்ஜ் இழப்பு ஏற்படுவது என்பது நம் அனைவரும் சந்திக்கின்ற ஓர் பொதுவான பிரச்சனை இன்னும் ஸ்மார்ட் போன் எனில் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக அடிக்கடி சார்ஜ் குறையும் அவ்வாறு உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் இழக்கையில் அதனை விரைவாக சார்ஜ் செய்வதற்கான எளிய வழிகள்.

நமது மொபைலை சார்ஜருடன் கனக்ட் செய்துவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆகும் வரையில் நாம் போனை உபயோகிக்காமல் இருப்பதில்லைசார்ஜ் செய்துகொண்டே இணையத் தேடல் சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் சாட்டிங் போட்டோ எடுப்பது, வீடியோ பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

அதுபோன்ற காரணங்களாலேயே போன் முழுமையாக சார்ஜ் ஆவதில்லை. இப்படியான நேரங்களில் எப்படி நமது போனை விரைவாக சார்ஜ் செய்வதென பார்ப்போம்.

உங்கள் போன் சார்ஜரையே உபயோகித்திடுங்கள்:

யூஎஸ்பி பவர் பேங்கஸ் போன்றவற்றின் வழியாக சார்ஜ் செய்வதனை விட உங்கள் போனுக்கான சார்ஜரையே உபயோகித்திடுங்கள் அதன் வழியாகவே விரைவாக சார்ஜ் செய்ய இயலும் சுவற்றில் பதிக்கப்பட்ட சுவிட்ச் பாக்ஸின் வழியாக சார்ஜ் செய்வதன் வழியாகவும் விரைவாக சார்ஜ் செய்யலாம்.

ஏர்-பிளேன் முறையை ஆன் செய்யுங்கள்:

நீங்கள் விமானத்தில் பயணிக்காதபோதும் ஏர் பிளேன் முறையை ஆக்டிவேட் செய்து சார்ஜ் செய்திடுங்கள் இதன் மூலம் உங்கள் போனுக்கான நெட்ஒர்க் துண்டிக்கப்படுவதால் வேறு எத்தகைய பயன்பாட்டிலும் மொபைல் இல்லாத காரணத்தால் விரைவாகவும் சார்ஜ் ஆகும் உங்களுக்கு நேரமும் மீதமாகும்.

தேவையற்ற அம்சங்களை ஆப் செய்யலாம்:

உங்களுக்கு தேவையான அம்சங்கள் தவிர மொபைல் டேட்டா,வை-பை, ப்ளூடூத் போன்றவற்றை ஆப் செய்திடுங்கள் பேக்ரௌண்டில் இயங்கக் கூடிய பயன்பாட்டில் இல்லாத ஆப்களையும் ஆப் செய்திடுங்கள் இத்தகைய எளிய வழிகளை பின்பற்றுவதின் மூலம் உங்களது ஸ்மார்ட்போன் விரைவில் சார்ஜ் ஆகும் வகையிலும் எளிதில் சார்ஜ் இழக்காத வகையிலும் பயன்படுத்தலாம்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved