Sunday, 6 August 2017

கத்தார் விவகாரம் : மீண்டும் குட்டையை குழப்பும் அமெரிக்கா!

கத்தார் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மீண்டும் ட்விட்டரில் செய்தி வெளியிட்டு எரிகிறது நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறது அமெரிக்கா.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கான ஒப்பந்தத்தில் கத்தார் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இவ்விடயத்தில் ஒற்றுமை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் ட்ரம்ப் இவ்வாறு ட்விட்டரில் பதிவு செய்து புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ஒற்றுமையாக இருந்த வளைகுடா அமைப்பிலியங்கும் அரபு நாடுகள் ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து பிரிந்திருக்கும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் கத்தாரின் ஒப்பந்தம் மாத்திரம் போதாது என சவூதி கூட்டணி தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: