இலங்கை வரலாற்றில் அதி கூடிய போக்குவரத்து அபராதம் இதுதான்! எவ்வளவு தெரியுமா?

Published On Sunday, 27 August 2017 | 10:05:00


பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஒருவருக்கு முதல் முறையாக அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 இலட்சத்தி 20 ஆயிரம்  ரூபாய் அபராதமாக செலுத்துமாறு குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு பலபிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட அதி கூடிய அபராதம் இதுவென கருதப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளின் எண்ணை மாற்றுதல், சைலன்ஸர் பீப்பாயை மாற்றி அதிக சத்தத்தில் பயணித்தமை, போலி இலக்க தகடு பயன்படுத்திய காரணங்களுக்காக இந்த மோட்டார் சைக்கிள் பட்டபொல பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved