சவூதி அரேபியாவின் அல் அவாமியா நகரில் பெரும் பதற்றம்! மக்கள் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்வு

Published On Thursday, 3 August 2017 | 14:10:00

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் தப்பிச்செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சவூதி அரேபியாவின் அல் அவாமியா (al-Awamiyah) நகரிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் மோதல் நீடித்து வருகின்றமை காரணமாகவே மக்கள் இவ்வாறு வெளியேறி வருகின்றனர். மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியின் கிழக்கு மாகாணமான தம்மாமில் அமையப்பெற்ற அவாமியா நகரில் ஷீஆக்கள் செறிந்து வாழ்கிறார்கள். ஷீஆ மதத்தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவருக்கு மரண தண்டனை வழங்கியதிலிருந்து அங்கு அமைதியின்மை நிலவிவருகின்றது.

அப்பிராந்தியத்தில் ஷீஆ வன்மைவாதிகள் ஆதிக்கம் பெற்று வருவதையறிந்த சவூதி அரச படைகள் மேற்கொண்ட தேடுதலின் போது இருதரப்புக்குமிடையில் பலத்த மோதல் இடம்பெற்றுவருவதாகவும் பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved