Saturday, 5 August 2017

கைகுலுக்கி கட்டித்தழுவிய ஈரான் மற்றும் சவூதி அமைச்சர்கள் (படங்கள் இணைப்பு)

அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி அண்மையில் இடம்பெற்றுவரும் பதற்ற சூழல் குறித்து துருக்கியில் இடம்பெற்ற உலக முஸ்லிம் நாடுகளின் மாநாட்டில் சவூதி அரேபிய மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

ஈரான் மற்றும் சவூதிக்கு இடையிலான முறுகல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன்போது சவூதி வெளியுறவு அமைச்சர் அதெல் அல் ஜுபை, ஈரான் வெளியுறவு அமைச்சரை அணுகி கைலாகு கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் கட்டித்தழுவிக்கொண்டனர். இதனை அடுத்து இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனினும் இந்த சந்திப்பு இராஜதந்திர விதிமுறைகளை பின்பற்றி சாதாரணமாக நடைபெறும் ஒன்று என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன விவகாரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்ஸில் ஏற்பாடு செய்த மாநாடே ஸ்தன்பூல் நகரில் நடைபெற்றது. 


Author: verified_user

0 comments: